கேட்டதோ 14+1, கிடைப்பதோ 3+1: அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி?

பிரேமலதா
பிரேமலதா

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு மூன்று மக்களவைத் தொகுதிகளும், எதிர்காலத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமலதா
பிரேமலதா

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக தரப்பும்,  அதிமுக தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இரண்டு தரப்பிலும் கூட்டணிக்கு அழைப்பதால் தேமுதிக தனது டிமாண்ட்டை அதிகரித்துக் கொண்டே சென்றது.

கட்சியின் பொதுக்குழு,  செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா,  "தேமுதிகவுக்கு அதிகமான இடங்களை, அதாவது 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக அறிவித்துள்ளனர்" என்று  தெரிவித்தார்.

அதற்கு எந்த வகையிலும் சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் பிரேமலதா விஜயகாந்த்  இவ்வாறு கூறியதற்கு காரணம், யார் அதிக இடங்களை கொடுக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதை தெரிவிக்கத்தான். இந்த நிலையில் அவரது ஆஃபரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக தரப்பில் அதிகபட்சம் மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும், மாநிலங்களவை உறுப்பினர் குறித்து பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்றும் பதில் கூறப்பட்டதாக தெரிகிறது. 

பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்
பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்

ஆனால் அதிமுக தரப்பில் மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தர சம்மதித்துள்ள நிலையில், இதற்கு பிரேமலதா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றோ அல்லது மாநிலங்களவை மூலமோ நாடாளுமன்றத்துக்கு சென்றே தீர வேண்டும் என்று பிரேமலதா முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.  

அதிமுகவிடம் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்று  எதிர்காலத்தில் அப்படியே பாஜகவை சமாதானப்படுத்தி மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கணக்குப் போடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிட்டத்தட்ட அதிமுக - தேமுதிக கூட்டணி முடிவடைந்து விட்டதாகவும்,  விரைவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in