ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்... பிரதமர் மோடியின் அசத்தல் அறிவிப்பு!

ரேஷன் கடை
ரேஷன் கடை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் நாளை முதல் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறினார். கரீப் கல்யாண் யோஜ்னா (PM Garib Kalyan Yojana) குறித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வரவேற்பு வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகளுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் காங்கிரஸ் ஒருபோதும் வழங்கியதில்லை என்று கூறினார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் ஒருபோதும் ஏழைகளை மதிப்பதில்லை என்றும் பாஜக மக்களுக்கான அரசு என்றும் பிரதமர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in