இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்... ரஜினி பட இயக்குநர் திடீர் ஆதரவு!

இயக்குனர் ஞானவேல்
இயக்குனர் ஞானவேல்

நடைபெற உள்ள தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரான த.செ. ஞானவேல் சினிமாவுக்குள் நுழைந்து இயக்கிய ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய திரை உலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. 

தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார்.  படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மிக ஆவலாக உள்ளனர். 

ஞானவேல்
ஞானவேல்

இந்த நிலையில் இயக்குனர் ஞானவேல், நாளை மறுதினம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றின் மூலம் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.  அதில், 'வருங்கால சந்ததியினருக்கு  வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கல்வி உரிமை,  கருத்து உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக்கொள்வதும் அவசியம்.  அதன் அடிப்படையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நான் அறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஞானவேல் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in