பாஜகவினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அமலாக்கத் துறைக்கு டெல்லி நிதியமைச்சர் கேள்வி!

டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி அமைச்சர் அதிஷி

சந்தேகத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியினரை கைது செய்துள்ள அமலாக்கத் துறை பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என டெல்லி அமைச்சர் அதிஷி கேள்வியெழுப்பியுள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா
அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர்களான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக டெல்லி அரசு நிலை குலைந்துள்ளது. இதற்கிடையே, இதே வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், சமீபத்தில் ஜாமீன் கிடைத்ததால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அமைச்சர் அதிஷி
அமைச்சர் அதிஷி

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்மாநில நிதி அமைச்சர் அதிஷி, “நான் பாஜகவில் சேர்ந்தால் எனது அரசியல் வாழ்க்கை காப்பாற்றப்படும். இல்லையெனில் அமலாக்கத் துறை ஒரு மாதத்துக்குள் என்னை கைது செய்யும் என நெருங்கிய ஒருவர் மூலம் பாஜக என்னை அக்கட்சியில் சேர அழைப்பு விடுத்துள்ளது" என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அதிஷியின் இந்த பேட்டி குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து அதிஷிக்கு தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “நீங்கள் டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசின் அமைச்சராகவும், ஒரு தேசிய கட்சியின் தலைவராகவும் இருக்கிறீர்கள்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள், தங்கள் தலைவர்கள் பொதுவெளியில் சொல்வதை அப்படியே நம்புகின்றனர். அந்த வகையில் நீங்கள் வெளியிட்ட கருத்துகள் தேர்தல் பிரச்சார விவாதத்தை பாதிக்கின்றன. எனவே, தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் படி வரும் 8ம் தேதி மதியம் 12 மணிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.

பாஜக புகாரின்பேரில் தேர்தல் ஆணையம் உடனடியாக நோட்டீஸ் அனுப்பியது குறித்து அமைச்சர் அதிஷி கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை குறிவைத்து கைது செய்ய சிபிஐ, ஈடி (அமலாக்கத்துறை) மற்றும் இப்போது தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்தி வருகிறது. இந்த ஏஜென்சிகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதை விட்டுவிட்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்துப் போராட வேண்டும் என பாஜகவிடம் கூற விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அதிஷி, “வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி தலைவர்களை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. பாஜக தலைவர்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டை நிறுவ முடிந்த அமலாக்கத்துறை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in