குஜராத்தில் பரபரப்பு... பாஜக போட்டியின்றி வென்ற சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரைக் காணோம்!

சூரத் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி
சூரத் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி

குஜராத் மாநிலம், சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாயமாகி உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் இன்று தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் குமார் சந்திரகாந்த் தலாலும், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானியும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நிலேஷ் கும்பானி வேட்புமனுவில் முன்மொழிந்த 4 பேரும் தாங்கள் வேட்புமனுவில் கையொப்பமிடவில்லை என தெரிவித்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

காங்கிரஸ் மாற்று வேட்பாளரின் மனுவும் இதே காரணத்துக்காக தள்ளுபடி ஆனது. அதேபோல் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பிற கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேட்சைகளும் சொல்லிவைேத்தாற் போல் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால், முகேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாஜகவின் முகேஷ்குமார் சந்திரகாந்த் தலாலுக்கு (இடது) வெற்றி சான்றிதழை வழங்கும் தேர்தல் அலுவலர்
பாஜகவின் முகேஷ்குமார் சந்திரகாந்த் தலாலுக்கு (இடது) வெற்றி சான்றிதழை வழங்கும் தேர்தல் அலுவலர்

முகேஷ் குமாரின் வெற்றி இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்துள்ளது. இந்நிலையில், குஜராத்தில் ஆளும் பாஜக தவறான மற்றும் தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி, மீண்டும் சூரத்தில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுதியுள்ளது.

இது தொடர்பாக நேற்று தேர்தல் ஆணையர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “சூரத் தேர்தலை ஒத்திவைக்கவும், குறுகிய காலத்தில் தேர்தலை மீண்டும் நடத்தவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கும்பானிக்கு நான்கு பேர் முன்மொழிந்தனர். ஆனால் திடீரென 4 பேரும் தங்கள் கையொப்பங்களை மறுத்தனர்.

அபிஷேக் சிங்வி
அபிஷேக் சிங்வி

இது தற்செயல் நிகழ்வு அல்ல. வேட்பாளரை பல மணிநேரம் காணவில்லை. அவர் மீண்டும் வருவதற்குள் மற்ற வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்” என்றார்.

இதற்கிடையே, காங்கிரஸ் வேட்பாளரான நிலேஷ் கும்பானி, மாயமாகி உள்ளதாகவும், அவரை போனிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்களில் இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in