'முஸ்லிம்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்'... பாஜக பெண் வேட்பாளரால் சர்ச்சை!

பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.
பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.

செங்கிசெர்லாவில் உள்ள முஸ்லிம்கள் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று ஹைதராபாத் பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.
பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக மாதவி லதா போட்டியிடுகிறார். இவர் செய்தியாளர்களிடம் நேற்று மாலை கூறுகையில்," தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன்.

பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.
பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.

கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்" என்று குற்றம் சாட்டினார்.

பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.
பாஜக வேட்பாளர் டாக்டர் மாதவி லதா.

மேலும் அவர் கூறுகையில்," இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் சிஏஏ தேவை. ஹோலி பண்டிகையின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிறிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மாதவி லதா, அசதுத்தீன் ஒவைசி
மாதவி லதா, அசதுத்தீன் ஒவைசி

ஹைதராபாத் மக்களவை தொகுதியில் தற்போது மக்களவை தொகுதி உறுப்பினராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி உள்ளார். அவரை எதிர்த்து கொம்பெல்லா மாதவி லதா என்ற பெண் வேட்பாளரை முதல் முறையாக பாஜக களமிறக்கியுள்ளது. மாதவி லதா நிஜாம் கல்லூரியில் பொது நிர்வாகத்தில் பி.ஏ மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ பட்டம் பெற்றவர். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட விரிஞ்சி மருத்துவமனையின் தலைவராகவும் மாதவி லதா உள்ளார். அத்துடன் மாதவி லதா மிகச்சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞராவார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஹைதராபாத் பாஜக பெண் வேட்பாளரான மாதவி லதாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in