பாஜக-விடம் ராஜ்யசபா சீட் கேட்கிறவங்க தாமரையில போட்டியிடணும்... கே.பி.ராமலிங்கம் அதிரடி!

கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு...
கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு...

பாஜக கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகளில் சில, “எங்களுக்கு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும்” என்று டிமாண்ட் வைக்கின்றன. இந்த நிலையில், "கூட்டணி பேச்சு வார்த்தையின் போது மாநிலங்களவை சீட் கேட்கும் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்” என பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் சரியானபடிக்கு சத்தான கூட்டணி அமையாத சங்கடத்தில் இருக்கின்றன. அதிமுக கூட தனித்துப் போட்டியிடும். ஆனால், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே விரும்புகிறது.

நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்
நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்

பாஜக கூட்டணியில் புதிய நீதி கட்சியும் ஐஜேகே-யும் மட்டுமே உள்ளன. இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணி வேட்பாளராக தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். அநேகமாக ஐஜேகே பாரிவேந்தரும் தாமரையில் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம்.

தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பாஜக, அதிமுக என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப் படுகிறது. இரண்டு தரப்பிலுமே இந்தக் கட்சிகள் ராஜ்ய சபா சீட் என்ற நிபந்தனையை விதிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜ்ய சபா நிபந்தனை விதிக்கும் கட்சிகளுக்கு பாஜக சார்பில் திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு
பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு

இது தொடர்பாக இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம், “தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜக தொண்டர்களின் விருப்பம். தமிழகத்தில் பாஜகவிடம் ராஜ்யசபா சீட் கேட்பவர்கள், மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். என்றபோதும் மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா சீட் கேட்கும் கட்சிகளுக்கு பாஜக கூட்டணியில் இடமில்லை. பிரதமர் மோடி வேண்டும் - வேண்டாம் இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் தான் இந்தத் தேர்தலில் போட்டி” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in