தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில்... கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து கேரளாவில் களமிறக்கும் காங்கிரஸ்!
ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டவர் சுனில் கனுகோல். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க இவரும் முக்கிய காரணமானார். இந்த நிலையில் கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து, கேரளாவிலும் அவரை தங்களுக்கான தேர்தல் உத்தி வகுப்பாளராக காங்கிரஸ் கட்சி களம் இறக்கி உள்ளது.
நேற்று(அக்.04) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் சுனில் கனுகோல் கலந்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்த, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநிலத்திலுள்ள கட்சித் தலைவர்களுக்கு சுனில் கனுகோலுவை அறிமுகப்படுத்தினார்.
லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் கூட்டம் நடைபெற்றது. ஜனவரி மாதம் கேரள பிசிசி தலைவர் கே.சுதாகரன் தலைமையில் கேரள யாத்திரை நடத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தற்போதைக்கு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார வியூகங்களை வகுக்க சுனில் கனுகோலின் உதவியை காங்கிரஸ் பெற இருக்கிறது. சுனிலின் குழு கேரள மாநிலத்தில் ஏற்கனவே அடிமட்ட அளவிலான ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கமிஷன் கொள்ளை பெயரிலான வீரிய பிரச்சாரத்தை தொடங்குவதில், சுனில் முக்கிய வியூகங்களை வகுத்து தந்தார்.
இதே பாணியில் கேரளாவின் ஆளும் சிபிஎம் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சார உத்திகளை சுனில் தங்களுக்கு வழங்குவார் என கேரள காங்கிரஸார் எதிர்பார்க்கின்றனர். இவற்றின் பொருட்டு சிபிஎம் ஆட்சியில், முதல்வர் பினராயி விஜயன் உட்பட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை சுனில் அணியினர் பட்டியலாக தொகுத்து வருகின்றனர்.
சுனில் கனுகோல் உபயத்தில் விரைவில் கேரள அரசியல் பரபரக்க இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்