திமுக துரோகம் செய்து விட்டது... காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் குற்றச்சாட்டால் பரபரப்பு!

செய்தியாளர்களிடம் பேசும் பிரின்ஸ் எம்.எல்.ஏ
செய்தியாளர்களிடம் பேசும் பிரின்ஸ் எம்.எல்.ஏ

குமரி மாவட்ட நான்கு வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு எங்கள் நம்பிக்கையை வீணடிப்பு செய்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்று காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரின்ஸ்
பிரின்ஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவரும் அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து  கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் "நான்கு வழிச்சாலை பிரச்சினை என்பது தீயைப் பற்ற வைத்திருப்பது போன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயதாரிணி
விஜயதாரிணி

சாதாரண மக்களின் அதிகாரம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.   இழப்பீடு என்பது பாரபட்சம் பார்த்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது கடந்த 13 வருடங்களாக நடந்து வருகிறது.  அதிமுக ஆட்சிக்காலத்திலும் இதே நிலைதான் இருந்தது.  திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு கொண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால்  இந்த அரசு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. வருகிற சட்டப் பேரவைத்தொடரில் இந்த பிரச்சினைக்காக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போகிறேன்" என்று தெரிவித்தார்.

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரிணி  கலந்து கொள்ளவில்லை. அதை சுட்டிக்காட்டிய பிரின்ஸ்,  மக்கள் அறியாமல் ஏமாந்து போனதாக தனது கட்சி எம்எல்ஏ குறித்து கருத்துச் சொன்னார். அவரது இந்த பேட்டி சொந்தக்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியைக்  குற்றம் சாட்டுவதாக அமைந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in