அமித் ஷா வருகை... கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் திடீர் போராட்டம்!

பெங்களூருவில் மத்திய அரசை கண்டித்து முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பெங்களூருவில் மத்திய அரசை கண்டித்து முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

உள் துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூருவுக்கு இன்று வர உள்ள நிலையில், மத்திய அரசைக் கண்டித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டி போட்டியிடுகிறார்.

பெங்களூரு  விதான் சவுதா முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பெங்களூரு விதான் சவுதா முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

இந்நிலையில், அமித் ஷா பெங்களூரு வர உள்ள நிலையில் மாநிலத்துக்கு வறட்சி நிவாரண நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்களான முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்கள் பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், “வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வறட்சி நிவாரணமாக ரூ.650 கோடி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், மத்திய அரசு தரவேண்டிய நிதியைத் தரவில்லை. கர்நாடகாவுக்கு நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” என்றார்.

ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “கர்நாடகாவுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மோடி அரசு கர்நாடக விவசாயிகளையும் கர்நாடக மக்களையும் பழிவாங்க முயன்று வருகிறது.

இந்த பழிவாங்கும் அரசியல் பாஜகவின் தீய அரசியல். அமித் ஷா இன்று வருகிறார். ரூ.18,172 கோடி ரூபாயை விடுவிக்காமல் கர்நாடகாவின் மண்ணில் காலடி வைக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.” என்றார்.

அமித் ஷா வர உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டம் நடத்தியதால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in