'என் தாயை அவமதித்து விட்டார்கள்...’ சர்ச்சையை பிரச்சாரமாக்கும் பீகார் தேர்தல் களம்

தனது தாயுடன் சிராக் பஸ்வான் - தேஜஸ்வி யாதவ்
தனது தாயுடன் சிராக் பஸ்வான் - தேஜஸ்வி யாதவ்

பீகார் தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஆர்ஜேடி கட்சியினர் தனது தாயை அவமதித்து விட்டதாக, ராம் விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் பகிரங்க கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் மேற்கொண்ட இந்த முறையற்ற செயல் குறித்து அக்கட்சியின் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ்க்கு இந்த கடிதத்தை சிராக் பஸ்வான் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் தாயை அவமதித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போக்கைக் கண்டித்தும், சிராக் பஸ்வான் அந்த கடித்தத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவுக்கு காத்திருக்கும் பீகார் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இந்த பகிரங்க கடிதம் அனலைக் கூட்டியுள்ளது.

தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானின் தாயார் வீணா பாஸ்வானை, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் அவமதிப்பாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக லோக் ஜனசக்தி - ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே மோதல் மூண்டுள்ளது.

தேஜஸ்வி யாதவ் - சிராக் பஸ்வான்
தேஜஸ்வி யாதவ் - சிராக் பஸ்வான்

ஆர்ஜேடி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய சிராக் பஸ்வான், லாலு பிரசாத் யாதவ் காலத்து பீகாரின் காட்டாட்சி குறித்து விமர்சித்து இருந்ததும், அங்கே புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

"ராப்ரி தேவி அவர்களுக்கும்(லாலு பிரசாத் யாதவ் மனைவி) என் அம்மாவுக்கும் இடையே, எந்த வித்தியாசமும் எனக்குப் புரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. அரசியல் கட்சிகள் வெவ்வேறு கொள்கைளைக் கொண்டிருக்கலாம்; கருத்து வேறுபாடுகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் ஒருவருடைய தாயைப் பற்றி இப்படிக் கேவலமான வார்த்தைப் பிரயோகம் செய்வது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

"உங்கள் கட்சி ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கை 90-களின் பீகார் காட்டாட்சி நினைவுகளை புதுப்பித்துள்ளது. அந்த காலங்களில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வீட்டை விட்டு வெளியேறுவது கடினம். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். சித்ரவதை செய்யப்பட்டனர். உங்கள் கட்சியினர் மீண்டும் அதனை நிகழ்த்தி உள்ளனர். ஒரு மகனாக, என் அம்மாவைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எனது தாயை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று தேஜஸ்வி யாதவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் சிராக் பாஸ்வான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் மகளும், தேஜஸ்வி யாதவ் சகோதரியுமான மிசா பார்தி
லாலு பிரசாத் யாதவ் மகளும், தேஜஸ்வி யாதவ் சகோதரியுமான மிசா பார்தி

இந்த கடிதத்தை அடுத்து ஆர்ஜேடி எம்பியும் தேஜஸ்வி யாதவ் சகோதரியுமான மிசா பார்தி, சிராக் பஸ்வான் மீது காட்டம் தெரிவித்துள்ளார். "இது கண்டிக்கத்தக்கது, எந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கும் எதிராக இது போன்று இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி என் சகோதரி மற்றும் தந்தைக்கு எதிராக இதுபோன்ற ஒரு இழிவான கருத்தை தெரிவித்தபோது சிராக் பாஸ்வான் ஏன் அமைதியாக இருந்தார் என்று அவரிட்ம் கேட்க விரும்புகிறேன்" என்று சீறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பீகார் பாஜகவின் மகளிர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். பிரச்சாரக் களத்தில் பரஸ்பரம் சேறுவீசும் அரசியல் கட்சியினர் போக்கு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in