தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் வாக்குவேட்டை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Updated on
2 min read

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட், லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் கலந்த கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். பின்னர் இரவு தூத்துக்குடி அருகில் தனியார் விடுதியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ராஜாஜி பூங்கா அருகே பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியின் முக்கிய சந்தையான காய்கனி மார்க்கெட்டில் முதல்வர் ஸ்டாலின், காய்கறி வாங்க வந்த மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து பாளை ரோட்டில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின் வழியெங்கும் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தவாறு, பாத்திமா நகர், லயன்ஸ் டவுன் பகுதியில் வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் சூசை தப்பாஸ் என்பவர் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தியவாறு வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in