”முதலில் ரேபரேலியில் வெல்லுங்க” ராகுல் காந்தியை உரசிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ்!

கேரி காஸ்பரோவ், ராகுல் காந்தி
கேரி காஸ்பரோவ், ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சீண்டும் விதமாக 'முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்' என குறிப்பிட்டு செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி, ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பதில் பல வாரங்களாக அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும் முறையே கிஷோரி லால் சர்மா, ராகுல் காந்தி ஆகியோரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

இந்நிலையில் ரேபரேலியில் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

அதில், “ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற செய்திக்கு பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் அரசியல் மற்றும் சதுரங்கத்தில் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் செஸ் விளையாட்டை அரசியலுடன் ஒப்பிட்டு பேசிய ராகுல், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது முதலில் செஸ் விளையாடியதாகவும், பின்னர் விளையாட்டின் விதிகளை கற்றுக் கொடுத்தவரை வெற்றி கொண்டதாகவும் கூறினார்.

மேலும், தனக்கு பிடித்த செஸ் வீரர்களில் ஒருவரான கேரி காஸ்பரோவ் தனது எதிரிகள் மீது நிறைய உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துபவர் என்றும் அவர் ஒரு நேரியல் அல்லாத சிந்தனையாளர் (non-linear thinker) என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில்@SandipGhose என்ற பயனர் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய உலக சதுரங்க சாம்பியனும் (கேரி காஸ்பரோவ்), கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்தும் முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டதால் நம் காலத்தின் மிகச்சிறந்த சதுரங்க மேதையை எதிர்கொள்ள வேண்டியதில்லை" என ராகுல் காந்தியின் செஸ் ஆர்வத்தை விமர்சித்து பதிவு வெளியிட்டிருந்தார். மேலும் அவர் அந்த பதிவுடன் கேரி காஸ்பரோவையும் டேக் செய்திருந்தார்.

இதனை அறிந்த கேரி காஸ்பரோவ் இதற்கு பதில் தெரிவித்து வெளியிட்ட பதிவில், “முதலிடத்திற்கு சவால் விடுவதற்கு முன்பு நீங்கள் முதலில் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் எனபது பாரம்பரிய கட்டளை" என பதிலளித்தார்.

கேரி காஸ்பரோவின் இந்த பதிவு ராகுல் காந்தியை சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

பின்னர் கேரி காஸ்பரோ வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 'இந்திய அரசியலில் வாதிடுவதற்கும் நிபுணத்துவம் பெறுவதற்கும் எனது சிறிய நகைச்சுவை பயன்படாது என நான் நம்புகிறேன். ஆனால், ஒரு அரசியல்வாதி என் அன்பான விளையாட்டில் தலையிடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.

எனினும் கேரி காஸ்பரோவ் வெளியிட்டுள்ள பதிவால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in