பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது ஏன்?... மியூசிக் அகாடமி விளக்கம்!

பாடகர் கிருஷ்ணா
பாடகர் கிருஷ்ணா

"டி.எம் கிருஷ்ணா நீண்ட காலம் இசைத்துறையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது. அவரின் கலையைத் தாண்டி வேறு எந்த காரணத்தையும் கருத்தில் கொள்ளவில்லை" என்று சென்னை மியூசிக் அகாடமி விளக்கமளித்துள்ளது.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. "பிராமணியத்திற்கு எதிரான பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை. இந்த விருது அறிவிப்பு, சங்கீத உலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது" என, கர்நாடக சங்கீத கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி உட்பட 6 கலைஞர்கள் அறிவித்துள்ளனர்.

பாடகிகள் ரஞ்சினி, காயத்ரி
பாடகிகள் ரஞ்சினி, காயத்ரி

இது சர்ச்சையானதை அடுத்து ரஞ்சனி மற்றும் காயத்ரிக்கு எதிராகவும், பாடகர் கிருஷ்ணாவுக்கு ஆதரவாகவும் பெரியார் ஆதரவாளர்கள், இடதுசாரி அரசியல் கட்சித் தலைவர்கள், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சக கலைஞர்கள் ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியமாக திமுக எம்.பி- கனிமொழி, "பெரியாரின் கருத்துகளைப் படித்தால், அவர் உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் என்பது நமக்கு புரியும். பெரியாரைப் போற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்பது சமீபத்தில் தமிழர்கள் குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஷோபாவின் வெறுப்பு நிறைந்த பேச்சைப் போன்றது" என்று குறிப்பிட்டிருந்தார்.

மியூசிக் அகாடமி
மியூசிக் அகாடமி

இந்நிலையில், "சங்கீத கலாந்தி விருது அறிவிப்பு குறித்து இசைக்கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி கூறிய கருத்து, இது தேவையற்ற மற்றும் அவதூறான கருத்து" என குறிப்பிட்டு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது மியூசிக் அகாடமி.

'டி.எம் கிருஷ்ணா நீண்ட காலம் இசைத்துறையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் இந்த விருது பரிந்துரைக்கப்பட்டது. அவரின் கலையைத் தாண்டி வேறு எந்த காரணத்தையும் கருத்தில் கொள்ளவில்லை" என்று மியூசிக் அகாடமி தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!

முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in