சிசிடிவி கேமராக்கள் மீண்டும் பழுது; விழுப்புரத்தில் இவிஎம் இயந்திரங்களின் பாதுகாப்பு இவ்வளவு தானா?

சிசிடிவி கேமராக்கள் மீண்டும் பழுது; விழுப்புரத்தில் இவிஎம் இயந்திரங்களின் பாதுகாப்பு இவ்வளவு தானா?

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2வது முறையாக சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து இருப்பது அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கடத்த 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தற்போது பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை சுற்றிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் இந்த பகுதிகளில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மட்டும் 39 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிடும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 3ம் தேதி அன்று சிசிடிவி கேமராவில் பழுது ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மின் கோளாறு காரணம் என அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி
விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி

இந்த நிலையில் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில், திடீரென சிசிடிவி கேமரா ஒளிபரப்பு தடையானது. இது குறித்து உடனடியாக அரசியல் கட்சிகளின் முகவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து சிசிடிவி கேமராக்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றால் சிசிடிவி கேமராவின் வயர்கள் அறுந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுதடைந்த 7 சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்பட்டு, மீண்டும் ஒளிபரப்பு துவங்கியது. இதனிடையே கடந்த முறை சிசிடிவி கேமரா பழுது ஏற்பட்டபோது இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. விசிக வேட்பாளர் ரவிக்குமார் உட்பட அரசியல் கட்சியினர் பலரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in