தேர்தல் விதி மீறல்... அமித் ஷா மீது தெலங்கானா போலீஸார் வழக்கு!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) துணைத் தலைவர் நிரஞ்சன் ரெட்டி, அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'ஹைதராபாத்தில் கடந்த மே 1-ம் தேதி அமித் ஷா பங்கேற்ற பாஜக பேரணியின் போது, அவருடன் சில குழந்தைகள் காணப்பட்டனர். மேலும், அந்தக் குழந்தைகள் தங்கள் கைகளில் பாஜக சின்னத்தை வைத்திருந்தனர். இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.

ஹைதராபாத் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா, வேட்பாளர் மாதவி லதா (இடது)
ஹைதராபாத் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா, வேட்பாளர் மாதவி லதா (இடது)

தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அல்லது நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.’ என குறிப்பிட்டிருந்தார் நிரஞ்சன் ரெட்டி. இந்தப் புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, தேர்தல் ஆணையம் ஹைதராபாத் போலீஸாருக்கு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, புகார் தொடர்பாக விசாரித்த போலீஸார், அமித் ஷா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டி.யமன் சிங், மூத்த பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டி, எம்எல்ஏ- டி. ராஜா சிங் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஐபிசி பிரிவு 188-ன் (பொது ஊழியர் பிறப்பித்த உத்தரவை மீறுதல்) கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்பி-யான மாதவி லதா மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in