மாயாவதியால் ஒரு சீட்டில் கூட வெற்றிபெற முடியாது... காரணத்தை சொன்ன அகிலேஷ் யாதவ்!

மாயாவதி அகிலேஷ் யாதவ்
மாயாவதி அகிலேஷ் யாதவ்

பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது. ஏனெனில் அதன் பாரம்பரிய ஆதரவாளர்கள் இந்த முறை அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றப்போகும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் அறிவித்திருந்த ஆகாஷ் ஆனந்தை அப்பொறுப்புகளில் இருந்து நீக்கி, அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சி சதி அழிந்துவிட்டது. இப்போது நடந்துள்ள கட்சியின் "உள் மாற்றங்கள்” மிகவும் தாமதமானது. மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது. ஏனெனில் அதன் பாரம்பரிய ஆதரவாளர்கள் இந்த முறை அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கிறார்கள்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

பகுஜன் சமாஜ் கட்சி இதை தனது அமைப்பின் தோல்வியாகக் கருதுகிறது. அதனால்தான் அதன் தலைமைத் தலைமை இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் கையை விட்டுப் போய்விட்டது. அந்தக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது. கடந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் சரி, மீதமுள்ள நான்காம் கட்ட தேர்தலிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

மாயாவதி - ஆகாஷ் ஆனந்த்
மாயாவதி - ஆகாஷ் ஆனந்த்

இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் வாக்குகளை வீணாக்காமல், அரசியலமைப்பைக் காப்பாற்றப் போராடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in