
திமுக மகளிரணி சார்பில் சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மாநாடு குறித்து விமர்சனம் செய்துள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “திமுக நடத்துவது மகளிர் உரிமை மாநாடு அல்ல... மகளிர் வாரிசு உரிமை மாநாடு” என கூறியுள்ளார். ”வாரிசு அரசியலில் கூட, பெண்களை பின்னுக்குத்தள்ளி, தங்களது ஆண் வாரிசுக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்தியா கூட்டணி கட்சிகளின் அரசியல் பாரம்பரியம்.
நீண்டகால அரசியல் அனுபவமும், திறமையும் கொண்ட கனிமொழி, திமுகவுக்கு உள்ளேயே தனது உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார். “மகள் இருந்தும் மகன் உதயநிதியை தான் தனது அரசியல் வாரியாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என குறிப்பிட்டுள்ளார் அவர், “அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்க முடியாத திமுக, மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறது” என்றும் கிண்டலடித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...