மாவோயிஸ்டுகள்
மாவோயிஸ்டுகள்

என்கவுன்டரில் கொலையான மாவோயிஸ்டுகளை தியாகிகள் என்பதா? காங்கிரஸ் கருத்துக்கு எதிராக பொங்கும் பாஜக

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட மவோயிஸ்டுகளை தியாகிகள் என்றதற்காக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத், பாஜகவின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற கான்கேர் என்கவுன்டர் சம்பவத்தில் பாதுகாப்பு படையினரால் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா கருத்து தெரிவிக்கையில், மாவோயிஸ்டுகளை ’தியாகிகள்’ என்று வர்ணித்து இருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

என்கவுன்டர்
என்கவுன்டர்

”பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை வரவேற்பதற்கு பதிலாக, மவோயிஸ்டுகளை தியாகிகள் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. நமது பாதுகாப்பு படைகளின் துணிச்சலை இதன் மூலம் அவர்கள் கேள்விக்குறியாக்கி உள்ளனர்” என பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நக்சல்களை தியாகிகள் என வர்ணித்து அவர்களுக்கு சுப்ரியா அனுதாபம் தெரிவித்துள்ளார். என்கவுன்டர் நடவடிக்கை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினரின் உண்மையான முகத்தை அவர் அம்பலப்படுத்தி உள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி உறுதியாவதால், மாவோயிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துள்ளனர்” என்று சாடியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்

முன்னதாக இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக குதித்திருக்கும், நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிரான விமர்சனத்துக்காகவும், சுப்ரியா சர்ச்சையில் சிக்கினார். கங்கனாவுக்கு எதிரான இழிவான பதிவை வெளியிட்டதாக அவர் மீது புகார்கள் அதிகரித்ததும், சுப்ரியா பின்வாங்கினார்.

அதன்படி, மேற்படி சர்ச்சை கருத்தினை தான் வெளியிடவில்லை என்றும், எவரோ தனது சமூக ஊடக கணக்குகளில் சர்ச்சை கருத்தினை பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சர்ச்சை பதிவு தனது கவனத்துக்கு வந்த பிறகு அதனை உடனடியாக நீக்கியதாகவும், எந்தவொரு பெண்ணுக்கும் எதிராக தான் மோசமான தாக்குதலில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in