டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியான ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ஸ்வாதி மாலிவால் தான் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். கேஜ்ரிவால் இல்லத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாஜக கையிலெடுத்து, அரசியல் அரங்கில் கேள்வியாக தொடுத்து வருகிறது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், அவரது பதவிக்காலத்தின் முடிவாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார். ஆனால் நேரடி அரசியலில் இருந்து அவர் விலகியே இருந்தார். குறிப்பாக அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளானபோதும், அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கருத்து ஏதும் தெரிவிக்காது மவுனம் சாதித்தார்.
இது ஆம் ஆத்மி கட்சியினரை சீண்டியது. கட்சியின் எம்பியாக இருக்கு ஒருவர், கட்சித் தலைவர் கைதான விவகாரத்தில் கள்ளமவுனம் காப்பது குறித்து அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இடைக்கால ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கேஜ்ரிவாலை கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் பலரும் சந்தித்து வருவதன் வரிசையில் இன்று ஸ்வாதி மாலிவாலும் கேஜ்ரிவால் வீட்டுக்கு சென்றார்.
ஆனால் அங்கிருந்து திரும்பும்போது தான் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். இதனை பாஜக தலைவரான பன்சூரி ஸ்வராஜ், ”கேஜ்ரிவாலுக்கு வெட்கக்கேடு. சொந்தக் கட்சியின் பெண் எம்பியை பாதுகாக்காத ஸ்வாதி மாலிவால் எவ்வாறு டெல்லியின் மகளிரை பாதுகாக்கப் போகிறார்’ என்று கேள்வி எழுப்பினார்.
“அர்விந்த் கேஜ்ரிவாலின் தூண்டுதலால் அவரது தனிப்பட்ட உதவியாளர், கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவாலை அடித்து, தவறாக நடந்துகொண்டார் என்ற வெட்கக்கேடான செய்தி இன்று எங்களுக்கு கிடைத்தது. மேலும் இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு போன் செய்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் அவரது இல்லத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது” என்று பன்சூரி ஸ்வராஜ் மேலும் கூறினார்.
மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பிரச்சார களம் காணும் கேஜ்ரிவாலுக்கு இது கூடுதல் சங்கடத்தை உருவாக்கவும் காத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!
திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்
தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு
ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்ஷன் என்ன?
காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!