தாமரைக்கு வாக்கு கேட்கும் கருணாநிதி... பரபரப்பை கிளப்பும் பாஜகவின் வீடியோ!

கருணாநிதி
கருணாநிதி

கருணாநிதி  பேசும் வீடியோவை வெளியிட்டு, அதில் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் வீடியோ ஒன்று பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பாஜக
பாஜக

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் அதற்கான பிரச்சாரம் முடிவடைகிறது. மாலை 6 மணிக்கு பிறகு நேரடியாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும், கட்சியினரும் மிக மும்முரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்களின் தொகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், பிரச்சாரத்தை மாலை ஆறு மணிக்கு நிறைவு செய்கிறார்கள். இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள் மூலமாகவும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் பாஜக சார்பில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று அரசியல் கட்சியினரை திகைக்க வைத்துள்ளது. அது கருணாநிதி பேசும் பழைய வீடியோ. "தேர்தல் நெருங்கி விட்டது வீடு வீடாக செல், வாக்குகளை கேள், தெருத்தெருவாக அலைந்திடு, வீதி வீதியாக சென்றிடு, ஊரெல்லாம் சுற்றிடு, தமிழ்நாட்டை காப்பற்றிடு, இந்திய தாயகத்தை பாதுகாத்திடு அதற்காகவே" என்று அதில் கருணாநிதி பேசுகிறார்.

அவர் பேசி முடித்ததும்  தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பீர் என்று பின்னணிக் குரல் கேட்கிறது. இந்த வீடியோ தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி தேர்தல் பிரச்சாரங்களில் வாக்கு சேகரித்து வந்த பாஜக,  தற்போது கருணாநிதி பேச்சின்  வீடியோவை வைத்து தாமரைக்கு வாக்கு கேட்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  
இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in