கோவையில் பாஜகவினர் போராட்டம்... ஒரே வாக்குச்சாவடியில் 800 வாக்காளர்கள் நீக்கம்!

800 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து பாஜக போராட்டம்
800 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து பாஜக போராட்டம்

கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒரே வாக்குச்சாவடியில் 800 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதியின் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 அமைந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இங்கு 1,353 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாகவும், 800-க்கும் மேற்பட்டோர்களுக்கு ஓட்டுகள் இல்லை எனவும் பல்வேறு வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

800 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து பாஜக போராட்டம்
800 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து பாஜக போராட்டம்

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். அதிகாரி விசாரித்து பதில் அளிப்பதாக கூறினார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்களும், பாஜகவினரும் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இது குறித்து பேசினார்.

அதிகாரிகளுடன் எம்எல்ஏ, வானதி சீனிவாசன் பேச்சுவார்த்தை
அதிகாரிகளுடன் எம்எல்ஏ, வானதி சீனிவாசன் பேச்சுவார்த்தை

அப்போது கடந்த முறை வாக்களித்த வாக்காளர்களின் பட்டியல் தற்பொழுது குறுகிய காலத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து ஆர்.ஓ-விடம் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in