தாக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்பி-க்கு ஆதரவாக கேஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்ட பாஜக மகளிரணி!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்ட பாஜக மகளிரணியினர்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்ட பாஜக மகளிரணியினர்

ஆம் ஆத்மி கட்சி எம்பி-யான சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக மகளிரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவால். இவர் சமீபத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றபோது அங்கு முதல்வரின் தனி செயலாளர் பிபவ் குமார், சுவாதி மாலிவாலை தாக்கியதாக குற்றம்சாட்டினார். மேலும், இது தொடர்பாக டெல்லி போலீஸிலும் சுவாதி மாலிவால் புகார் அளித்தார்.

ஆம் ஆத்மி எம்பி- யான சுவாதி மாலிவால்
ஆம் ஆத்மி எம்பி- யான சுவாதி மாலிவால்

சுவாதி மாலிவாலின் இந்தக் குற்றச்சாட்டை, ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு எம்பி-யான சஞ்சய் சிங்கும் நேற்று உறுதி செய்ததோடு, இந்த விவகாரத்தில் முதல்வர் கேஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சுவாதி மாலிவால் முதல்வரின் இல்லத்தில் தாக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தை டெல்லி பாஜக மகளிரணியினர் இன்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்சதேவா கூறுகையில், "சுவாதி மாலிவால் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினால் பெரிய உண்மைகள் வெளிவரும். முதல்வரின் இல்லத்திலேயே அவரது கட்சி எம்பி தாக்கப்படுகிறார் என்றால் டெல்லியின் நிலைமையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். டெல்லி முதல்வர் அமைதியாக இருக்கிறார்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in