அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாதவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். கடந்த 2021ல் நடந்த பிக் பாஸ் 15 சீசனில் தனது கணவர் ரித்தேஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் ராக்கி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்குப் பிறகு 2022ல் இருவரும் பிரிந்தனர். ரித்தேஷிடமிருந்து பிரிந்த பிறகு, ராக்கி ஆதில் கான் துரானி என்பவரை மணந்தார்.

ஆனால், இந்தத் திருமணமும் பிரச்சினையில் முடிந்தது. ஆதிலுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ராக்கி குற்றம் சாட்டி பல வழக்குகளைத் தொடர்ந்தார்.

ஆதில் அதனை மறுத்ததோடு ராக்கி மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆபாச படங்கள் கசிய விட்டது தொடர்பாக சீக்கிரம் ராக்கி கைது செய்யப்படுவார் என்றும் ஆதில் கூறி வந்தார்.

இந்நிலையில், ராக்கி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகை ராக்கி சாவந்த்
நடிகை ராக்கி சாவந்த்

இதுகுறித்து அவரது முன்னாள் கணவர் ரித்தீஷ் ‘சீக்கிரம் அவரது உடல்நலன் குறித்து தெரிவிப்போம்’ என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருந்து ராக்கி ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in