ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே பாஜகவுடன் அன்புமணி கூட்டணி.. ஓ.எஸ்.மணியன் தாக்கு!

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று காலை அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சி.வி.சண்முகம், ”10 ஆண்டு காலமாக கூட்டணி கட்சிகளையும், எதிர்கட்சிகளையும் உடைத்த பாஜக அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. தேசியமும் தமிழும் என கூறி கூட்டணி அமைத்துள்ளவர்களுக்கு தங்களின் குடும்பமும், பணமுமே பிரதானம்” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

இதே போல் பாஜக, பாமக அமைத்துள்ள கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர்,” இட ஒதுக்கீடு என்றால் அறவே வேண்டாம் என்கிற கட்சியான பாஜகவுடன் இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ராமதாஸ் கூட்டணி அமைந்துள்ளது. ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அதே போல் வழக்குகளை காட்டி பாஜகவால் அதிமுகவை அடிபணிய வைக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழகம் முழுவதும் பரபரப்பு... ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு!

பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!

பெங்களூரு மட்டுமல்ல சென்னை உட்பட இந்தியாவின் மேலும் 5 நகரங்கள்... தண்ணீர் பஞ்சத்தால் விரைவில் நரகமாகும்!

குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in