இந்தியாவுக்கு வாக்களியுங்கள்... குஷ்பு போட்ட ஒற்றை பதிவால் பாஜகவில் சலசலப்பு!

குடும்பத்துடன் வாக்களித்த குஷ்பு
குடும்பத்துடன் வாக்களித்த குஷ்பு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகையும், பாஜக பிரமுகரான குஷ்பு 'Vote4INDIA' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்து அரசியலில் நுழைந்த நடிகை குஷ்பு. பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவிற்கு தாவினார். தற்போது பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

அவரது பேச்சும், சமூகதலைதளங்களில் போடும் பதிவும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு. சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

குஷ்பு சுந்தர்
குஷ்பு சுந்தர்

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் நாளில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன் கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் சென்னையில் இன்று வாக்களித்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "நான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன்.. நீங்களும் மறக்காமல் வாக்களியுங்கள்" என்று GoAndVote,Duty,Vote4INDIA, VoteFor400Paar போன்ற ஹேஸ்டேக்களைப் பயன்படுத்தி இருந்தார். இதில் மற்றதைவிட Vote4INDIA என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிக்கு 'இந்தியா கூட்டணி' என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் விதத்தில் குஷ்பு பதிவிட்டிருப்பது பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென விலகியது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், வோட் 4 இந்தியா என்று பதிவிட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த குஷ்பு,"இந்தியாவிற்காக வாக்களியுங்கள் என்ற நோக்கத்தில்தான் அவ்வாறு பதிவிட்டேன். இந்தியா கூட்டணியை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in