பெண்களை இழிவுபடுத்தியதற்காக எனில்... பாதி திமுகவினர் கைதாக வேண்டும்; பாஜக வானதி சீனிவாசன் காட்டம்!

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி

பெண்களை இழிவு படுத்தியதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால், பாதி திமுகவினர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை, கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான சீனிவாசன் திறந்து வைத்தார். தேர்தல் நடைமுறை காரணமாக கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில், அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து பொதுமக்களிடம் அவர் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி

அப்போது, ”தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்எல்ஏ அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் இதை வலியுறுத்துவோம். சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக அரசு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. திமுக குடும்பத்திற்கு எதிராக ட்விட்டர் சமூக வலைதளங்களை பேசுபவர்களை கைது செய்வதில் அக்கறை காட்டுகிறது. பத்ரி சேஷாத்திரி, மாரிதாஸ் என பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக சவுக்கு சங்கரையும் கைது செய்துள்ளனர்” என்றார்.

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்
கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்

மேலும், “சவுக்கு சங்கர் பாஜகவினரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். நான் திமுகவுக்கு செல்ல உள்ளதாகவும் பேசினார். ஆனால் திமுக அரசு தங்கள் மீதான விமர்சனத்தை சகித்துக் கொள்ள முடியாமல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. தமிழ்நாட்டில் பெண்களை இழிவுபடுத்தியதாக கைது நடவடிக்கை மேற்கொண்டால், பாதி திமுகவினர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரை இவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். திடீரென பெண்களின் காவலர்களாக இந்த அரசு உருமாறி விட்டது. கஞ்சா வழக்கு எனும் பழைய நடைமுறையை திமுக இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.

தேர்தல் காரணமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அலுவலக வளாகத்தில் கிடந்த மது பாட்டில்கள்
தேர்தல் காரணமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அலுவலக வளாகத்தில் கிடந்த மது பாட்டில்கள்

இதனிடையே நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தின் உள்ளே, மது பாட்டில்கள் கிடந்தன. அது குறித்து செய்தியாளர்கள் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அதிர்ச்சி அடைந்த அவர், ”சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்காமல் விட்டால் என்னவெல்லாம் நடக்கிறது என்று பாருங்கள். இன்னும் கொஞ்ச நாளில் கஞ்சா விற்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in