பையன் வேண்டாம்... தேனியில் நீங்களே நில்லுங்க ஜி; ஓபிஎஸ்சை கிளப்பும் பாஜக!

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

தேனி மக்களவைத் தொகுதியில் இந்தமுறை ஓ.பி.ரவீந்திரநாத்துக்குப் பதிலாக நீங்களே போட்டியிடுங்கள் என்று ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் ரவீந்திரநாத்
ஓ.பன்னீர்செல்வத்துடன் ரவீந்திரநாத்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக,  பாமக  உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஆனால், தேனி மக்களவை தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் இந்த தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார். கட்சி, சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. அதை மீட்பேன் என்று சபதமிட்டு ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதிமுக கூட்டணி நீடிக்க வேண்டும் என்று நினைக்கும் பாஜக அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கும் பயன் கிட்டவில்லை. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பாஜக உள்ளது.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்ததில் இருந்தே பாஜகவுடன் ஓ.பன்னீர் செல்வம் நட்புறவில் இருந்து வருகிறார். பிரதமர் மோடிதான் மீண்டும் வெற்றி பெறுவார் எனவும் கூறி வருகிறார். பாஜகவோ டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், அதிமுக நழுவிச் சென்றது. இந்த நிலையில் தான், பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக வேறு ஒரு யோசனையைக் கூறியுள்ளதாக தெரிகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர் செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் என்பதுதான் அந்த யோசனை.  பெண் விவகாரம் உள்ளிட்ட ஒரு சில விவகாரங்களில் ரவீந்திரநாத்துக்கு மக்களிடம் அதிருப்தி இருப்பதாக நினைக்கும் பாஜக, அதற்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வம் நின்றால் வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறது.

கூட்டணி வலுவாக இல்லாத பட்சத்தில் தங்கள் கூட்டணி ஓரிரு  இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பில் பாஜக உள்ளது. அதனால் இந்த முறை தேனியில் ஓ.பன்னீர் செல்வம் களமிறங்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. சட்டசபையிலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோய், பின் இருக்கையில் ஓரமாக உட்கார வேண்டிய சூழல் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வந்துள்ளது. இதனால் இனியும் சட்டசபை செல்வதா என்ற மனநிலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம், தனது தரப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என எண்ணுகிறார். 

அதனால் அவர்  தாமரைச் சின்னத்தில் தேனியில் போட்டியிடத் தயாராகி விட்டதாகக் கூறுகிறார்கள். மகனுக்கு வேறு ஏதாவது ஒரு பதவியை பாஜகவிடம் கேட்டு வாங்கிக் கொடுத்து விடலாம் என்றும் அவர் கருதியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in