பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; கழுத்தில் கட்சி துண்டுடன் வந்ததால் தகராறு!

புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ், பாஜகவினர் மோதல்
புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ், பாஜகவினர் மோதல்

புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள், காங்கிரஸ் பிரமுகர் கழுத்தில் கட்சி துண்டுடன் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசீலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் வாக்களிக்க வந்த போது பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ், பாஜகவினர் மோதல்
புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ், பாஜகவினர் மோதல்

அவர் கழுத்தில் காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிந்து வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும் கழுத்தில் இருந்து துண்டை எடுக்க விக்னேஷ் மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக வாக்குச் சாவடிக்குள் தாக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ், பாஜகவினர் மோதல்
புதுச்சேரியில் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ், பாஜகவினர் மோதல்

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சியை சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in