ஆதிவாசி என்ற பெயரை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது - ராகுல் காந்தி ஆவேசம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆதிவாசி என்ற பெயரை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பரப்புரையில் பேசிய அவர், "ஆதிவாசிகள் என்றால் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று பொருள். ஆதிவாசி என்ற பெயரை பயன்படுத்தினால், அவர்களிடம் இருக்கும் நிலத்தையும், நீரையும், வனத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், வனவாசி என்று அழைக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசியதாவது, “ஆதிவாசி என்ற சொல் என்பது புரட்சிகரமான வார்த்தை. 'ஆதிவாசி' என்றால் நாட்டின் முதல் உரிமையாளர். இந்த வார்த்தையை பாஜகவினர் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினால் காடு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை உங்களிடம் திருப்பித் தர வேண்டும். அதனால்தான் 'வனவாசி' என்ற புதிய வார்த்தையை பா.ஜ.கவினர் கொண்டு வந்துள்ளனர்.

இதன் அர்த்தம் காட்டில் வசிப்பவர்கள். இந்த வார்த்தை ஆதிவாசிகளை அவமதிக்கும் வார்த்தை. இந்த வார்த்தையை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஏற்காது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ், பாஜ., தலைவர்கள் ஆதிவாசிகளை வனவாசிகள் என்று அழைக்கின்றனர். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க தொண்டர் ஒருவர் 'ஆதிவாசி' இளைஞர் மீது சிறுநீர் கழித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அவர்களின் சித்தாந்தம் என்ன?. அனைவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன். பணமதிப்பிழப்பு மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும். ஜி.எஸ்.டி.,யால் இந்தியா மாறும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.

மோடியின் நண்பர் அதானி சத்தீஸ்கரில் ஒரு சுரங்கத் திட்டத்தை வைத்திருந்தார். ஆனால் எங்கள் பழங்குடி சகோதர சகோதரிகள் இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னார்கள். காங்கிரஸ் அவர்களின் குரலுக்கு மதிப்பளித்து அதானியின் திட்டத்தை ரத்து செய்து காட்டியது” இவ்வாறு ராகுல் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in