‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருப்பின் ராமர் கோயிலை கட்டியிருப்போம்’ -அசோக் கெலாட் அதிரடி

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியம் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்திருப்பின் நாங்களும் ராமர் கோயிலை கட்டியிருப்போம். அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால், ஆட்சியில் எவர் இருப்பினும் ராமர் கோயில் எழுந்திருக்கும்’ என அதிரடி அரசியல் கருத்தினை தந்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரான அசோக் கெலாட்.

ராமர் கோயிலை கட்டமைத்ததன் மூலமாக இந்தி இதய மாநிலங்களின் பெரும் வாக்கு வங்கியை பாஜக சேகரித்துள்ளது. இதுவே அந்த பிராந்தியங்களில் காங்கிரஸ் கட்சி தடுமாறவும் காரணமாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் ராமர் கோயிலுக்கு எதிரானவர்கள் என்ற பாஜகவின் பரப்புரையை அகற்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள் போராடி வருகின்றனர். ராமர் கோயில் விழாவை அரசியல் திட்டமாக பாஜக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி, அயோத்திக்கு செல்லாத காங்கிரஸ் தலைவர்கள், தற்போது ராமர் கோயிலுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் இந்த வகையில் ராமர் கோயிலுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் எதிரானது அல்ல என்ற கருத்தை நிறுவ முயன்றார்.

’உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியே ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளாதாகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி மத்தியில் இருந்திருப்பின் ராமர் கோயிலை நாங்கள் கட்டியிருப்போம்’ என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ராமர் கோயிலுக்கு உரிமை கோரும் பாஜவுக்கு பதிலடி தந்துள்ளார். மேலும் ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் எதிரானது என்ற கருத்தையும் மக்கள் மத்தியிலிருந்து நீக்க அசோக் கெலாட் முயன்றிருக்கிறார். முன்னதாக இதே பாணியில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், ராஜிவ் காந்தியை முன்னிறுத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவான கருத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அயோத்தி பாபர் மசூதி வளாகத்தின் பூட்டை திறந்து அங்குள்ள தலத்தில் ராமபக்தர்கள் வழிபட ராஜிவ் காந்தி வழியேற்படுத்தி தந்தார் என்று கமல்நாத் கூறியிருந்தார். தேர்தல் நெருக்கத்தில் பாஜகவின் ‘ராமர் கோயில்’ வாக்குவங்கியை குறிவைத்து, காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது பிரச்சாரக் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவை எந்தளவுக்கு வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, வாக்கு எண்ணிக்கை முடிவின்போதுதான் தெரிய வரும்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in