ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்... ஓய்வெடுக்க மலைப்பிரதேசங்களுக்கு படையெடுக்கும் தலைவர்கள்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓய்ந்தது பிரச்சாரம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓய்ந்தது பிரச்சாரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய மலைப்பிரதேசங்களுக்கு தலைவர்கள் படையெடுக்க உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரங்கள் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு மேல் சமூக வலைதளங்களில்கூட பிரச்சாரங்கள் மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி வாகன நெரிசல்
நீலகிரி வாகன நெரிசல்

நாளை மறுநாளான ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு துவங்க உள்ளது. மாலை 6 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும். தேவை ஏற்பட்டால் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடியில் காத்திருக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன நெரிசல்
கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன நெரிசல்

இதனிடையே தேர்தல் வெப்பம் தணிந்துள்ளதால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஓய்வுக்காக குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுக்க உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் உள்ள ஏராளமான சுற்றுலா தங்குமிடங்கள் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் சில தலைவர்கள் வட மாநிலங்களில் உள்ள குளிர் பிரதேசங்களுக்கு கிளம்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், தலைவர்கள் இந்த பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி தான் நடைபெறும் என்பதால் அதுவரையிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் கால பரபரப்புகள் எதுவும் இருக்காது என்பதால், இந்த முடிவினை அரசியல் கட்சியினர் எடுத்துள்ளனர். நீலகிரி மற்றும் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி உள்ளதால் ஏற்கெனவே கடும் வாகன நெரிசலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு முக்கிய தலைவர்களும் வருகை தருவார்கள் என்பதால் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வணிகம் நன்றாக இருக்கும் என சிறு வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in