ஆம் ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணியால் அதிருப்தி; பாஜகவுக்கு தாவினார் டெல்லி காங்கிரஸ் தலைவர்

பாஜகவில் இணைந்த அர்விந்தர் சிங் லவ்லி
பாஜகவில் இணைந்த அர்விந்தர் சிங் லவ்லி

ஆம் ஆத்மி கட்சியுடனான காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார்.

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி. இவர், கடந்த வாரம் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தான் கட்சி பதவியிலிருந்து மட்டுமே விலகுகிறேன்; கட்சியிலிருந்து அல்ல என விளக்கம் அளித்திருந்தார். அர்விந்தர் சிங் லவ்லி, தனது ராஜினாமா கடிதத்தில், வடகிழக்கு டெல்லியில் கன்னையா குமார், வடமேற்கு டெல்லியில் உதித் ராஜ் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்ததற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கும் அர்விந்தர் சிங் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரும் டெல்லி காங்கிரஸுக்கு முற்றிலும் அந்நியர்கள் என்றும், தான் தேர்தல் டிக்கெட் எதிர்பார்த்து பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அர்விந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்த ஒரு வாரத்தில் அர்விந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் இன்று கூறுகையில், “நாங்கள் தொலைந்துபோன நேரத்தில் நாட்டிற்கும், டெல்லிக்கும் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அர்விந்தர் சிங் லவ்லி
அர்விந்தர் சிங் லவ்லி

இன்று நாங்கள் 5 பேர் பாஜகவில் இணைந்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக உருவாகியுள்ள சூழ்நிலையில் இருந்து டெல்லியை மீட்க தேவையான அனைத்தையும் செய்வோம்.” என்றார்.

பாஜகவில் இணைந்த அர்விந்தர் சிங் லவ்லி உள்ளிட்டோரை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்சதேவா மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே உள்ளிட்ட பாஜகவினர் வரவேற்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in