பாஜக வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள்... தொண்டர்களுக்கு உத்தரவிட்ட அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை

மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பாஜகவின் வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் இந்த முறை நாம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற உள்ளோம். டெல்லியில் பாஜக இந்த முறை 60 சதவீத வாக்குகளைப் பெறும். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். இது காலத்தின் கட்டாயம்.

டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பாஜக வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு தாமரை படர்ந்திருக்கும் காட்சியை மக்கள் பார்ப்பார்கள். அதன்பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in