இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

 ஜாமீனை நீட்டிக்க கோரிஅர்விந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு
ஜாமீனை நீட்டிக்க கோரிஅர்விந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு

கலால் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டுக்கான டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால், கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்ப்டார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் கடைசி கட்ட தேர்தல் நாளான வரும் ஜூன் 1ம் தேதி வரை, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதன்படி அவர் வரும் ஜூன் 2ம் தேதி சிறைக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

'பிஇடி-சிடி ஸ்கேன்' மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கேஜ்ரிவால் இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், “கலால் கொள்கை முறைகேடு வழக்கு போலியானது என பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

இந்த வழக்கில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, ஏராளமான கைதுகள் செய்யப்பட்ட போதிலும், தவறு நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அவர் (பிரதமர் மோடி) கூறியுள்ளார்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in