மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும்... கோவையில் அண்ணாமலை காட்டம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

”கோவை மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் என்ன வேலை பார்த்து இருக்கிறது என்று தெரியவில்லை” என பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை சுமார் 60 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இதனிடையே பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில், கோவை ராம் நகர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாஜகவினர் போராட்டம்
பாஜகவினர் போராட்டம்

அவர் பேசும் போது, ”கோவையில் ஒரு லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பூத்தில் 830 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது அனைத்து தேர்தல்களிலும் நடப்பது தான். ஆனால், இந்த முறை அதிகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன வேலை செய்துள்ளார்கள் என தெரியவில்லை” என்றார்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “பல்வேறு நாடுகளில் இருந்து வாக்களிப்பதற்காக வந்தவர்களுக்கு வாக்கு மறுக்கப்பட்டுள்ளது. எப்படி இப்படிப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்ய முடியும்? இந்த பகுதிகள் அனைத்திலும் மறுவாக்கு பதிவு நடத்தப்பட வேண்டும்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in