சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

கைது செய்ய துடிக்கும் ஆந்திர போலீஸ்... முன்ஜாமீனால் தப்பினார் சந்திரபாபு நாயுடு

அங்கல்லு கலவர வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கு, அங்கல்லு கலவர வழக்கு மற்றும் அதிவேக ஃபைபர் நெட் முறைகேடு வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய மாநில போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தில் உள்பட்ட சாலை முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அங்கல்லு கலவர வழக்கில் முன்ஜாமீன் கோரிய சந்திரபாபுவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அக்டோபர் 16ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திர உயர்நீதிமன்றம்

இதனிடைய அதிவேக ஃபைபர் நெட் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கிலும் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in