கடும் போக்குவரத்து நெரிசல்... மெட்ரோவில் பயணித்து படப்பிடிப்புக்கு சென்ற பிரபல நடிகர்!

நடிகர் ஹிருத்திக் ரோஷன்
நடிகர் ஹிருத்திக் ரோஷன்

மாநகர டிராஃபிக் காரணமாக பிரபல நடிகர் மெட்ரோவில் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்று மும்பை மெட்ரோவில் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றுள்ளார். தனது படங்கள் தொடர்பான அப்டேட், உடற்பயிற்சி, பர்சனல் விஷயங்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தொடர்ந்து பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது மும்பை டிராஃபிக் காரணமாக படப்பிடிப்புத் தளத்திற்கு செல்வதில் தாமதாகும் என மெட்ரோவில் சென்றுள்ளார்.

மெட்ரோவில் ரசிகர்களுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இன்று மெட்ரோவில் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன். அங்கு நிறைய அன்பான மக்களை சந்தித்தேன். சிறப்பான அனுபவமாக இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் இன்று இருக்கும் நிலையில் கடுமையான வெயிலையும் டிராஃபிக்கையும் சமாளித்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in