அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு; நெஞ்சை பதற வைத்த சம்பவம்!

நிர்வாகிக்கு சரமாரி வெட்டு
நிர்வாகிக்கு சரமாரி வெட்டு
Updated on
1 min read

சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பகுதி செயலாளரை அந்த அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளரின் கூட்டாளிகள் சரமாரியாக வெட்டினர். இதுகுறித்து நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் கும்மு என்ற குமரேசன்(33)‌. இவரது தம்பி கணேஷ் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ராயப்பேட்டை பகுதி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் வசித்து வருபவர் குமரன் என்ற டிங்கர் குமரன்(45). இவர் தந்தை பெரியார் திராவிட கழகத்தில் சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். ரவுடியான டிங்கர் குமரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் குமரேசனுக்கும், டிங்கர் குமரனுக்கு இடையே கடந்த ஓராண்டாக பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாகவும், குப்பை போடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரும் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஓருவர் புகார் அளித்துள்ளனர். போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தும்போது இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக எழுதிக்கொடுத்து விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு குமரேசன் வீட்டருகே நடந்து சென்றபோது டிங்கர் குமரன் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை வழிமறித்து சரமாரி கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் குமரேசன் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் வெட்டுக் காயத்துடன் ஆபத்தான நிலையில் இருந்த குமரேசனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தப்பி ஓடிய டிங்கர் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, குமரேசனை டிங்கர் குமாரின் ஆட்கள் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in