தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை ஜிஎஸ்டி மூலம் முடக்கியது பாஜக... ஆனந்த் ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பின் வாயிலாக நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மத்திய அரசு முடக்கி போட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின், ஊடகம் மற்றும் செய்திப் பிரிவு தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கே கோபிநாத் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்திப் பிரிவின் தலைவர் ஆனந்த் சீனிவாசன் இன்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2014 ஆண்டிற்கு முன்பு பாரத பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வரி விதிப்பு நடைமுறைகளில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அதற்குப் பின்பு அமைந்த மோடி தலைமைகளான அரசு ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பின் வாயிலாக நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக முடக்கி போட்டுள்ளது.

ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்

பல முனைகளில் இருந்தும் வரிவிதிப்பு ஏற்பட்டு சிறு தொழில் நிறுவனங்கள் நசுக்கப்பட்டு அடியோடு அழிந்து வருகின்றன. ராகுல் காந்தி தலைமையில் புதிய அரசு அமைந்தால், ஜிஎஸ்டி வரி விதிப்புகளில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். உலகச் சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை நிர்ணயத்திற்கு ஏற்றார் போல பெட்ரோலிய எரிபொருட்களின் விலை நிர்ணயத்தில் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்றியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த பொழுதே காங்கிரஸ் தலைமையிலான அரசு குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை மக்களுக்கு வழங்கியது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை குறித்து பாஜகவினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு குடும்பத் தலைவிக்கு தான் எரிபொருளின் உபயோகமும் மதிப்பும் தெரியும் என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மத்திய நிதி அமைச்சரோ தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. எல்பிஜி பயன்படுத்துவதில்லை என்பதால் அது பற்றி எனக்குத் தெரியாது என பொறுப்பற்று பேசி வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in