தொடங்கியது இரண்டாவது இன்னிங்ஸ்... உபியில் ரோடு ஷோ நடத்தினார் ஆதித்யநாத்!

அமித் ஷா, நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத்
அமித் ஷா, நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத்

வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பாஜக தலைவர்கள் இன்று முதல் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்காக பாஜக இன்று இண்டாம்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கியது.

பாஜக
பாஜக

ராஜஸ்தானில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்குள்ள சித்தோர்கர், ராஜ்சமண்ட், ஜோத்பூர் ஆகிய இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பில்வாரா மற்றும் கோட்டாவில் தேர்தல் பிரச்சார பேரணிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பன்ஸ்வாரா மற்றும் பீன்மாலில் நாளை நடைபெறும் பேரணிகளில் பங்கேற்க உள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் முதல் பிரச்சாரம், பாஜக மாநிலத் தலைவரும், சித்தோர்கர் தொகுதி மக்களவை வேட்பாளருமான சிபி ஜோஷியின் தொகுதியில் இருந்து தொடங்கியது. நிம்பஹேராவில் ஜோஷிக்கு ஆதரவாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ரோடு ஷோ சென்றார். அவர், அங்குள்ள பண்டகசாலை பகுதியில் இருந்து ஷெகாவத் சர்க்கிள் வரை ஒரு கி.மீ. சாலைப் பயணம் மேற்கொண்டார்.

பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு பீமா மைதானத்தில் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, மாலை 4.20 மணிக்கு ஜோத்பூரில் ரோடு ஷோ நடத்தும் முதல்வர், அங்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இணைந்து பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in