ரூ.36 கோடி சொத்து; சொந்த கார் கூட இல்லை: வேட்பு மனு தாக்கல் செய்தார் அமித் ஷா!

உள் துறை அமைச்சர் அமித் ஷா வேட்புமனு
உள் துறை அமைச்சர் அமித் ஷா வேட்புமனு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு ரூ.36 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா, குஜராத் மாநிலம், காந்தி நகரில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமித் ஷா, நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்
மத்திய அமைச்சர் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்

மேலும், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும், சொந்த கார் இல்லை எனவும் அமித் ஷா பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அமித் ஷா மனைவி சோனல் ஷாவுக்கு ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ரூ.22.46 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ. 9 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் அடங்கும்.

அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் ஆண்டு வருமானம் 2022-23ல் ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பி-க்கான சம்பளம், வீடு மற்றும் நில வாடகைகள், விவசாய வருமானம், பங்குகள் மற்றும் ஈவுத்தொகை ஆகியவை தனது வருமான ஆதாரங்கள் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பிரமாணப் பத்திரத்தின் தொழில் பிரிவில், அமித் ஷா ஒரு விவசாயி மற்றும் சமூக சேவகர் என தெரிவித்துள்ளார். தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா, குஜராத்தின் காந்தி நகர் எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். அதன் பின்னர் காந்தி நகர் மக்களவை தொகுதி உறுப்பினராக 30 ஆண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in