‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

நேரு - அமித் ஷா
நேரு - அமித் ஷா
Updated on
2 min read

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நேரு காட்டிய அலட்சியமே காரணம் என பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தாக்கியுள்ளார்.

தேர்தல் நெருக்கத்தில் திசை திருப்பல் பாணியிலான அரசியலை பாஜக மேற்கொள்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தின் சாதனைகளை முன்வைத்து பாஜக வாக்கு கேட்காது, ராமர் கோயில், சிஏஏ உள்ளிட்ட பெரும்பான்மையினரை உணர்ச்சிவயத்தில் ஆழ்த்தும் பிரச்சாரங்களை முன்னெடுத்தது இந்த வகையில் விமர்சனத்துக்கு ஆளானது. அடுத்தபடியாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றம் வைத்த குட்டு மற்றும் அவப்பெயரை துடைத்தெறிய, கேஜ்ரிவால் உள்ளிட்ட கைது நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கு ஆளானது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இந்த வரிசையில் அருணாச்சல் பிரதேசத்தை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதோடு, தற்போதைய நிலவரமாக அங்கே பல பகுதிகளுக்கு பெயரிட்டும் வருகிறது. அவற்றிலிருந்து பெரும் திசை திருப்பலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ்-திமுக என எதிர்க்கட்சிகள் இரண்டையும் ஒருசேர பாஜக தாக்கி வருகிறது. பாஜக குரலில் பொதிந்துள்ள நியாயங்கள், அவற்றின் அரசியல் நோக்கம் மற்றும் கேள்வியாக அவை எழுப்பப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றன.

இவற்றின் வரிசையில், பாஜக தலைவர்களால் அதிகம் தாக்குதலுக்கு ஆளாகி வரும், தேசத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருக்கு எதிராக இம்முறை அமித் ஷா பாய்ந்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ”ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை அமல்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு பெரும் தவறு செய்துவிட்டார். மேலும் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்கவும் நேருவே காரணம். போரில் இந்திய ராணுவம் வெற்றிமுகத்துடன் முன்னேறிய போது, நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்தார். 2 நாள் கழித்து அதைச் செய்திருப்பின், காஷ்மீரின் ஒரு பகுதி நம் கையை விட்டு போயிருக்காது” என முழங்கினார்.

அமித் ஷா
அமித் ஷா

நேருவை குறிவைத்து மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மக்களவை கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ”நேரு இரண்டு பெரிய தவறுகளைச் செய்தார். 1948-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது முழு காஷ்மீரையும் வெல்லாமல் போர் நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் பாகிஸ்தானுடனான பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றார். நேருவின் இந்த தவறுகளால் காஷ்மீர் நீண்ட கால பாதிப்புக்கு ஆளாக வேண்டியதாயிற்று” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in