ஜார்க்கண்ட் வரிசையில் பீகார் எம்எல்ஏக்கள் ஹைதராபாத்தில் ‘சிறை வைப்பு’... தெலங்கானாவில் தெறிக்கும் சர்ச்சை

ஹதராபாத்தில், பீகார் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
ஹதராபாத்தில், பீகார் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

பாஜகவின் குதிரை பேர அச்சம் காரணமாக, ஜார்க்கண்டைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இருந்தும், எம்எல்ஏக்கள் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசின் புதிய முதல்வராக கடந்த வாரம் சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அரசியல் மாற்றம் ஜார்க்கண்டில் நிகழ்ந்தது.

ஹைதராபாத் கொண்டுசெல்லப்பட்ட ஜார்க்கண்ட் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள்
ஹைதராபாத் கொண்டுசெல்லப்பட்ட ஜார்க்கண்ட் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள்

அவற்றையடுத்து இன்றைய தினம்(பிப்.5) ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில், முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஆட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. இதன் பொருட்டு ஆளும் கூட்டணியை சேர்ந்த ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் எம்எல்ஏக்களை, எதிர்க்கட்சியான பாஜக கவர முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே பாதுகாப்பு கருதி ஜார்க்கண்ட் மாநில ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கடந்த 3 தினங்களாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்த ஜார்க்கண்டுக்கு கிளம்பிய நிலையில், பீகாரிலிருந்து எம்எல்ஏ குழுவினர் தங்கள் பாதுகாப்புக்கு ஹைதராபாத்தில் அடைக்கலமாகி உள்ளனர்.

ஜார்க்கண்டுக்கு முன்னதாகவே பீகார் மாநில ஆட்சியில் அரசியல் முகாம் மாற்றம் ஏற்பட்டது. மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு முழுக்குப் போட்டு மீண்டும் பாஜகவுடன் இணைந்து, முதல்வராக அமர்ந்திருக்கிறார். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக முகாம் கவரலாம் என்று எழுந்த களேபரத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இரு மாநில முதல்வர்கள்; பீகாரின் நிதிஷ் குமார் மற்றும் ஜார்க்கண்டின் சம்பாய் சோரன்
இரு மாநில முதல்வர்கள்; பீகாரின் நிதிஷ் குமார் மற்றும் ஜார்க்கண்டின் சம்பாய் சோரன்

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலங்கானா மாநிலத்தில், ஜார்க்கண்டைத் தொடர்ந்து, பீகார் எம்எல்ஏக்கள் அடைக்கலமானதற்கு, பிரதான எதிர்க்கட்சியான சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதர மாநிலங்களின் அரசியல் விவகாரங்களில் உதவுவதற்காக தெலங்கானாவின் அரசு அதிகார அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், காவல்துறையினர் கடமையும் மற்றும் மாநில செலவினங்களும் விரயம் செய்யப்படுவதாகவும் பிஆர்எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் 19 பீகார் எம்எல்ஏக்களில் 16 பேர் மட்டுமே ஹைதராபாத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், இதர 3 பேர் ஏற்கனவே முகாம் தாவி விட்டதாகவும் வெளியான தகவல்களால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in