சீமான் அண்ணன் எனக்கு ஸ்லீப்பர் செல்... அண்ணாமலை அதிரடி!

கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது 'ஸ்லீப்பர் செல்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்
மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்

மதுரை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவியை ஆதரித்து மதுரை, கோ.புதூரில் கடந்த 31-ம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “தம்பி அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான் தான் அவரை பாஜகவுக்கு அனுப்பியுள்ளேன். 'என் மண், என் மக்கள்' , ‘வேல் யாத்திரை' எல்லாம் என்னுடைய முன்னெடுப்புகள். எனவே பிரதமர் மோடி, தம்பி அண்ணாமலை எல்லாம் எனக்கு வேலை செய்கிறார்கள்" என்றார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, சீமான் தன்னுடைய ஸ்லீப்பர் செல் என கூறியது அரசியல் அரங்கில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அண்ணாமலை, சீமான்
அண்ணாமலை, சீமான்

இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, இன்று தனது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை. ஓட்டும் இல்லை. அண்ணாமலை சீமான் அண்ணனின் ஸ்லீப்பர் செல்லா... இல்ல சீமான் அண்ணன் அண்ணாமலையின் ஸ்லீப்பர் செல்லா... இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எந்தப் பக்கம் வருகிறார்கள் என்று அவருக்குத் தெரியும். இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு சிறப்பாக உள்ளது. எனவே சீமான் அண்ணன் பேசியதை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.” என்றார்.

கச்சத்தீவு விவகாரம்
கச்சத்தீவு விவகாரம்

இதையடுத்து கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. அதன் ஆவணங்களை பெற ஆர்டிஐ மூலம் தகவல் பெற வேண்டியதன் அவசியம் என்ன என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இதை நாங்கள் (பாஜக) இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பது பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு.

கச்சத்தீவை பெற்றால் தான் தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு கடந்த 3 ஆண்டுகளாக நேரில் சென்று அங்குள்ள உயர் அதிகாரிகள், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நண்பர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in