மத்திய அரசு அதிர்ச்சி... டெல்லியை முற்றுகையிட்டு போராடும் மாநில அரசுகள்!

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்
மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்
Updated on
2 min read

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு அலட்சியம், பாகுபாடு காட்டுவதாகக் கூறி கர்நாடகா அரசு நேற்று போராட்டம் நடத்திய நிலையில் கேரளா, தமிழ்நாடு சார்பில் இன்று தனித்தனி போராட்டம் நடைபெற்று வருகிறது.

2024-25 இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒதுக்காதது குறித்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி-க்கள் ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிதி ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக கூட்டணி எம்.பி-க்கள் கோஷமிட்டனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயன்
டெல்லியில் போராட்டம் நடத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதேபோல், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி சார்பிலும் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் கேரள அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் எம்.பி-க்கள் பங்கேற்றுள்ளனர். கேரளாவுக்கு எதிரான மத்திய அரசின் பாகுபாடு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட நிதி நெருக்கடி ஆகியவற்றால் மாநில அரசு எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக மாநிலத்துக்கு உரிய நிதிப் பகிர்வை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என கூறி, டெல்லி ஜந்தர் மந்தரில் அம்மாநில காங்கிரஸ் அரசு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில் போராட்டம் நடத்திய கர்நாடகா முதல்வர், துணை முதல்வர், எம்எல்ஏக்கள்
டெல்லியில் போராட்டம் நடத்திய கர்நாடகா முதல்வர், துணை முதல்வர், எம்எல்ஏக்கள்

இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எம்பி-க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் கர்நாடாகா, தமிழ்நாடு, கேரளா என அடுத்தடுத்து மாநில அரசுகள் கண்டன போராட்டம் நடத்தி வருவதால் மத்திய பாஜக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in