
முதல்வரின் தனித் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் அது ஆளுநருக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கும், குறிப்பாக மோடிக்கு எதிரானதாக இருக்கும் என்பதால் அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது என பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்தார்.
திருவண்ணாமலையில் 7 விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காத நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், ‘’ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா குறித்துத்தான் இன்றைக்கு சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் இன்னொரு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோருவது, இந்த விவாகரத்தை நீர்த்துப் போக செய்யாதா, முதல்வரின் தனித்தீர்மானத்தை அவர்கள் ஆதரிப்பதாக கூறினார்கள்.
அதேவேளையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என அதிமுக நினைக்கிறது. அதனால் இல்லாத ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினாலும், இன்னும் அந்த நீரோட்டத்திலேயே அதிமுக உள்ளது. கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’ என அவர் விமர்சனம் செய்தார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!
சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!
அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!
குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!