நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு... காவல்துறை அனுமதி மறுத்ததால் நடவடிக்கை!

வடலூர் சத்திய ஞானசபை
வடலூர் சத்திய ஞானசபை

வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை  அனுமதி மறுத்ததையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சீமான்
சீமான்

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபையில் உள்ள  பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம்  அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
சுமார் 99.90 கோடி ரூபாய் அரசு செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

ஆனால் இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று  4-ம் தேதி வடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.  

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த  போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். அதனையடுத்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

'திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்தக்கோரியும் தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 04-05-2024 சனிக்கிழமையன்று, மாலை 03 மணியளவில் வடலூரில் நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும், தெய்வத் தமிழ்ப்பேரவைத் தலைவர்களையும் வீட்டிலேயே தடுப்புக்காவலில் வைத்து கொடும் அடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவுறுத்தலின் பேரில் இன்றைய ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உரிய அனுமதி பெற்று மாற்று தேதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in