பவன் கல்யாண் - நானி
பவன் கல்யாண் - நானி

அடுத்த வாரம் தேர்தல்... திடீரென பவன் கல்யாணுக்கு பிரபல நடிகர் ஆதரவு... குஷியில் தொண்டர்கள்!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற ஒரு வாரமே உள்ள நிலையில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு பிரபல நடிகர் நானி திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. வரும் மே மாதம் 13ம் தேதி ஆந்திர சட்டசபையின் 175 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா கட்சிகள் போட்டியிடுகின்றன.

தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 179 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை தொடர்ந்து முயற்சி செய்த நிலையில், இறுதியில் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

இந்த நிலையில் ஜனசேனா கட்சிக்கு கட்சியின் தலைவர் பவன் கல்யாணின் சகோதரரும், ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்து இருந்தார். தனது சகோதரர் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் ஜனசேனா கட்சிக்கு மற்றொரு பிரபல நடிகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் - நானி
பவன் கல்யாண் - நானி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நானி, ஜனசேனா கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் நானி வெளியிட்டுள்ள பதிவில், ’அன்பிற்குரிய பவன் கல்யாண் அவர்களுக்கு... நீங்கள் தேர்தலில் மிகப்பெரிய போட்டியை எதிர்கொண்டு இருக்கிறீர்கள். சினிமா குடும்பத்தின் ஒருவராக நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவதற்கும், உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் எனவும் உறுதியாக நம்பி வாழ்த்து தெரிவிக்கிறேன். நான் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். உங்களின் ஒட்டுமொத்த கட்சியினருக்கும் ஆதரவு தெரிவிக்கிறேன். வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நடிகர் நானி பவன் கல்யாண்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது அக்கட்சியினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கட்சி 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. நானியின் இந்த பதிவை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு இருப்பதோடு, லைக்குகளையும் குவித்து வருகின்றனர். மேலும் பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் ஜனசேனா கட்சி தொண்டர்கள், நானி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in