தேர்தல் பிரச்சாரம்... பிஆர்ஓ மீது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதி!

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும மக்கள் தொடர்பு அதிகாரி திவாகருக்கு எதிராக சொல்லப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திவாகர். இவர் அரசு ஊழியராக இருந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெயிலுமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘அமைச்சர் சேகர்பாபு, வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரம் குறித்த செய்தியை, நாடு முழுவதும் உள்ள 188 ஊடகங்களுக்கு தனது அலுவலக மின்னஞ்சல் முகவரியில் இருந்து  அனுப்பியுள்ளார் திவாகர். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார் வெயிலுமுத்து.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வமாலா மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில்,  'சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு  எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், வெயிலுமுத்துவின் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in